உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைகளின் ராணி நீலகிரி; ஊழலின் ராஜா உங்கள் எம்.பி.,; தி.மு.க., வேட்பாளர் மீது நமீதா காட்டம்

மலைகளின் ராணி நீலகிரி; ஊழலின் ராஜா உங்கள் எம்.பி.,; தி.மு.க., வேட்பாளர் மீது நமீதா காட்டம்

குன்னுார் : ''மலைகளின் ராணி நீலகிரி; ஊழலின் ராஜா உங்கள் எம்.பி,'' என, குன்னுாரில் நடிகை நமீதா பேசினார். குன்னுாரில் பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக, திரைப்பட நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:நம் நாடு மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றி வருகிறார்.தமிழகத்தில் இலவச சிலிண்டர் திட்டத்தில், 37 லட்சம் மகளிருக்கு காஸ் சிலிண்டர் கொடுத்துள்ளார். கொரோனாவால், 2 ஆண்டுகள் மக்கள் பாதித்த போது, உலகில் அனைத்து நாடுகளுக்கும், நமது விஷ்வகுரு மோடி, தடுப்பூசி கொடுத்து மக்களை காப்பாற்றினார். தமிழ் கலாசாரத்தை பெருமை படுத்தும் விதத்தில், தமிழகத்தின் செங்கோல் பார்லிமென்டில் வைக்க காரணமாக இருந்தார். நீலகிரியில் நீங்கள் தேர்வு செய்து அனுப்பிய, பெயர் கூட சொல்ல விரும்பாத எம்.பி., நமது மண், மதம், கோவில் மற்றும் கலாசாரம் உட்பட நம் அனைவரையும் அசிங்கமாக பேசி அவமானப்படுத்தி வருகிறார்.நீலகிரி மலைகளின் ராணி என்றால், அவர் ஊழலின் ராஜா. அவர் நிறைய பணமும். பிரியாணியும் தருவார். அவருக்கா உங்கள் ஓட்டு. 'தாமரை மலர்ச்சி; நீலகிரியின் வளர்ச்சி' என்பதற்காக, நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில ஓட்டு போட்டு, வேட்பாளர் முருகனை வெற்றி பெற வையுங்கள்.இவ்வாறு நமீதா பேசினார். பா.ஜ., மகளிர் நிர்வாகி சவீதாபோஜன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை