| ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
ஊட்டி:'ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெயர்ந்துள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், மனநல மருத்துவர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், உள்ளிட்ட பல்வேறு துறை மருத்துவர்கள் உள்ளனர்.புற நோயாளிகளாக பலர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பழைய கட்டட வளாகத்தில் ஆங்காங்கே தார் சாலை பெயர்ந்து உள்ளது. அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வரும்போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். பயிற்சிக்கு வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, மருத்துவ கல்லுாரி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.