உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு உரிமம் வழங்கவில்லை: பயணிகளை ஏமாற்றும் போக்குவரத்து கழகம்

எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு உரிமம் வழங்கவில்லை: பயணிகளை ஏமாற்றும் போக்குவரத்து கழகம்

குன்னுார்:'நீலகிரியில், 'எக்ஸ்பிரஸ்' மற்றும் சொகுசு பஸ்களுக்கு அனுமதி வழங்கவில்லை,' என, ஆர்.டி.ஓ., அளித்த தகவலால், அரசு போக்குவரத்து கழகம் விதிமீறலில் ஈடுபட்டு வருவது தெளிவாகி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில், அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலக உத்தரவுக்கு எதிராக,அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மோசடி தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில், 2019ல் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த பிப்., மாதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. எனினும் கோர்ட் உத்தரவு மீறப்பட்டு வருகிறது.இந்நிலையில், குன்னுாரை சேர்ந்த மனோகரன் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு ஆர்.டி.ஓ., அளித்த தகவலால், அரசு போக்குவரத்து கழகம் விதிகளை மீறி மக்களிடம் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பது தெளிவாகியுள்ளது.லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:ஆர்.டி.ஓ., 'எக்ஸ்பிரஸ்' பஸ்களுக்கு அனுமதி வழங்காத நிலையில், அரசு போக்குவரத்து கழகம், 80 கி.மீ. மேல் செல்லும், 200 க்கும் மேற்பட்ட நீலகிரி அரசு பஸ்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து பயணிகளிடம் சுரண்டி வருகிறது.எந்த அரசு பஸ்களிலும் கட்டண விபர பட்டியல்கள், கால நேர அட்டவணை, வழித்தட விபரங்கள் எதுவும் பயணிகளின் கண்களின் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட் முறையை நிறுத்தி அனைத்து பஸ்களிலும் பழைய சாதாரண டிக்கெட் வழங்கப்படுகிறது.போக்குவரத்துக் கழகம் செய்யும் மோசடி இந்த டிக்கெட்கள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என்பதால் டிஜிட்டல் டிக்கெட் வழங்குவதில்லை என்பது உறுதியாகிறது,எனவே, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு இயக்கும் அனைத்து பஸ்களிலும் முறைகேடாக எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை