மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்:பந்தலுார் அருகே வெட்டுவாடி கிராமத்தில், சேரங்கோடு ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நடந்தது.துணைத் தலைவர் சந்திரபோஸ் வரவேற்றார். தலைவர் லில்லி தலைமை வகித்தார்.மக்கள் பேசுகையில், 'கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வசதி படைத்தவர்களுக்கு, தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். ஆபத்தான மரங்கள் போர்வையில் நல்ல மரங்களை பலர் வெட்டி கடத்தி வருகின்றனர். மேலும், ஒரு நபருக்கு மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். துணைத்தலைவர் சந்திரபோஸ் பேசுகையில்,''பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, தீர்வு காணப்படும்,'' என்றார்.
03-Oct-2025