உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாட்டுக்காக ஓட்டு போடுங்க: ஆட்டம் போட்டு விழிப்புணர்வு

நாட்டுக்காக ஓட்டு போடுங்க: ஆட்டம் போட்டு விழிப்புணர்வு

குன்னுார்;குன்னுாரில் வருவாய் துறை சார்பில், 100 சதவீத ஓட்டுக்கள் பதிவு செய்ய வலியுறுத்தி ஆடல் பாடல்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குன்னுார் மவுண்ட் ரோடு பகுதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 'அனைவரும் கட்டாயம் ஓட்டு அளித்து தேசிய அளவில் பெயர் ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் செயலியை பயன்படுத்தலாம்,' என்றார்.தொடர்ந்து 'டூ ஆர் டை' நடன குழுவினர் சார்பில், ஓட்டுக்கள் அளிப்பதன் அவசியம் குறித்த பாடலுக்கு ஏற்ப நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.'அனைவரும் ஓட்டளிப்போம்' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ