உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மார்க்கெட்டில் கழிவுகள் அகற்றி துாய்மை பணி

மார்க்கெட்டில் கழிவுகள் அகற்றி துாய்மை பணி

ஊட்டி:ஊட்டி மார்க்கெட் பகுதியில் கழிவுகள் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் துாவி நகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தினர்.ஊட்டி மார்க்கெட்டில் ஏராளமான கடைகள், காய்கறி மண்டிகள் செயல்பட்டு வருகிறது. தினமும் மலை காய்கறிகளை விவசாயிகள், ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தவிர, அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட் பகுதிக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவுகள் ரவுண்டானா முன் பகுதியில் வீசி எறியப்படுகிறது. இதனால், அப்பகுதியில் காலை நேரத்தில் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் மக்கள் மூக்கை பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாரை அடுத்து நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை