மேலும் செய்திகள்
குறை தீர்ப்பு கூட்டம்; 227 கோரிக்கை மனுக்கள்
21-Aug-2024
ஊட்டி : குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி, சோலுார் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.சோலுார் கிராம ஊர் தலைவர் ஆலன் தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து அளித்துள்ள மனு: ஊட்டி வட்டம் சோலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட சோலுார் கிராமத்தில், 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக பதன்கோடு நீர் பிடிப்பு பகுதியிலிருந்து வரும் குடிநீரை உபயோகித்து வந்த நிலையில், அந்த குடிநீரும் தடைப்பட்டுள்ளது. கிராம மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதுடன் ஊற்று நீரை தேடி அலய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.பைக்காரா நீர் சேமிப்பு நிலையத்திலிருந்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க தாங்கள் ஆவன செய்யவேண்டும். அது வரை சோலுார் பேரூராட்சி நிர்வாகம் லாரி மூலம் குடிநீர் கொண்டு வந்து வினியோகித்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
21-Aug-2024