உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஊட்டி : கோத்தகிரியில், 69 பயனாளிகளுக்கு, 39 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கோத்தகிரி அருகே அரக்கோடு ஊராட்சி கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று, 69, பயனாளிகளுக்கு, 39 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், ''அரசு பொதுமக்களின் நலனுக்காக நல திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. முதல்வரின் அறிவுறுத்தல் படி, பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று இது போன்ற முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று கொள்வதோடு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தான் இது போன்ற முகாம்களின் நோக்கமாகும். இந்த முகாமில், 69 பயனாளிகளுக்கு, 39 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.கூடுதல் கலெக்டர் கவுசிக், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை