மேலும் செய்திகள்
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
11-Dec-2025
கடன் பெற்று தலைமறைவான நபருக்கு ஆறு மாதம் சிறை
11-Dec-2025
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களுக்கு உட்பட்ட, பள்ளிகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியில் மாணவ, மாணவியர் பங்கேற்று, யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன் பேசுகையில், 'யோகா பயிற்சி செய்வதால், உடல் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் கிடைக்கும். தினமும் யோகா செய்து வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்,' என்றார். இதில் ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்று, யோகாசனங்களை செய்தனர். அதேபோன்று மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் பள்ளியிலும், யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன.
11-Dec-2025
11-Dec-2025