உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 12 ஆண்டுகளுக்கு பின் தைப்பூச தேரோட்டம்

12 ஆண்டுகளுக்கு பின் தைப்பூச தேரோட்டம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், வரும் 25ம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது.மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றின் கரையில், பழமையான சுப்ரமணியர் சுவாமி கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.2012ம் ஆண்டிலிருந்து கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றதால், தைப்பூச திருவிழா நடைபெறாமல் இருந்தன. 2011ம் ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடந்தது. கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படாமல் இருந்ததால், தேர் சக்கரங்கள் பழுதடைந்தன. இதனால், கடந்தாண்டு தேரோட்டம் நடைபெறவில்லை.உபயதாரர்களின் உதவியோடு, 7.40 லட்சம் மதிப்பில், நான்கு புதிய சக்கரங்கள், இரண்டு சட்டங்கள் புதிதாக செய்து பொருத்தப்பட்டன. தேர் வெள்ளோட்டம் வரும் 21ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுப்பணி அதிகாரிகள் அனுமதி கிடைத்தவுடன், வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளது.வரும் 22ம் தேதி இரவு கிராம சாந்தி, 23ம் தேதி காலை 11:00 மணிக்கு கொடியேற்றம், 24ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவம் நடக்கின்றன. 25ம் தேதி பிற்பகல் அலங்காரம் செய்த தேருக்கு, வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி எழுந்தருளுகிறார். அன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, 27ம் தேதி பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ