மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
6 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
6 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
6 hour(s) ago
பாலக்காடு : பாலக்காடு அருகே, தொழிற்சாலையில் இருந்து வெளியான விஷ வாயுவை சுவாசித்ததால் பாதிப்படைந்த, 20 தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு அருகே அகஸ்திய டெக்ஸ்டைல்ஸ் கார்மென்ட்ஸ் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த தொழிற்சாலையில், கடந்த, 6ம் தேதி மதியம் விஷ வாயு கசிந்தத்தை தொடர்ந்து அங்கு பணியாற்றும் தொழிலாளிகளுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது. அன்று, பாதிப்படைந்த, 10 தொழிலாளிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதேபோல், நேற்று முன்தினமும், நேற்றும் விஷ வாயு கசிந்ததால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, மேலும், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு பிரிவுகளாக செயல்படும் தொழிற்சாலையில் 'டையிங்' பிரிவில், வாயு கசிவு சரி செய்யப்பட்டுள்ளதாக, தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago