உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 250 கிலோ அரிசி பறிமுதல்: வருவாய் துறை விசாரணை

250 கிலோ அரிசி பறிமுதல்: வருவாய் துறை விசாரணை

கூடலுார்:கூடலுார் அருகே, சாலையோரம் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 250 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.கூடலுார் ஓவேலி சாலை வன சோதனை சாவடி அருகே, அரிசி மூட்டைகள் மறைத்து வைத்து இருப்பதாக, வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் சிறிதும் பெரிதுமாக, 15 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி சாலையோரம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'வெளிமாநிலத்தில் இருந்து காய்கறி எடுத்து வரும் சிலர், வீடுகளுக்கு சென்று ரேஷன் அரிசி சேகரித்து கடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, தொடர் விசாரணை மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை