உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு; தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு; தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

ஊட்டி;மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.நீலகிரி மாவட்டம், தேவாலா பெருங்கரை உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்,55. கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழ் செல்வி. காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியிடையே குடும்ப தகராறு அதிகரித்துள்ளது.அவ்வப்போது, அவர்களுடைய பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, 2009ம் ஆண்டு உறவினர் ஒருவரின் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, நாகேஷ்; தமிழ் செல்வி தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,'நீ உயிரோடு இருந்தால் எனக்கு பிரச்னை; உயிரோடு இருக்காதே,' என்று கூறிவிட்டு நாகேஷ் சென்று விட்டார்.இதனால், மன விரக்தி அடைந்த தமிழ் செல்வி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாலா எஸ்.ஐ. பிரேம்குமார் தலைமையிலான போலீசார் நாகேசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் கூறப்பட்டது.அதில், மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் நாகேசுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு வழங்கினார். வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். நாகேஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை