உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ரூ.80,000 மதிப்புள்ள புதிய போன் தவறவிட்டவரிடம் ஒப்படைத்த வியாபாரி

 ரூ.80,000 மதிப்புள்ள புதிய போன் தவறவிட்டவரிடம் ஒப்படைத்த வியாபாரி

குன்னுார்: குன்னுார் அருகே அருவங்காட்டில், 80,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை, தவறவிட்டவரிடம், வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒப்படைத்தார். குன்னுார் பாய்ஸ் கம்பெனி கேட்டில் பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும், இவர் நேற்று முன்தினம் மொபைல் போனை தவறவிட்டு உள்ளார். இந்நிலையில், அருவங்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முபாரக் எம்.ஜி., காலனி பஸ் ஸ்டாப் அருகே, இரவு, 8:45 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கீழே கிடந்த மொபைல் போனை கண்டெடுத்தார். மொபைலை தவறவிட்ட லோகேஷ் அதே எண்ணிற்கு அழைத்தபோது, அவரின் மொபைல் என உறுதி செய்து, நேற்று அருவங்காடு பகுதி சேர்ந்தவர்கள், முன்னிலையில் லோகேஷிடம் மொபைல் போனை ஒப்படைத்தார். போனை உரியவரிடம் ஒப்படைத்த வியாபாரிகள் சங்க தலைவருக்கு, சங்க உறுப்பினர், பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை