உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை தாக்கி வன ஊழியர் காயம்

காட்டு யானை தாக்கி வன ஊழியர் காயம்

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், காரைக்குடி வனச்சரகம், தொரப்பள்ளி அருகே உள்ள, சீனகொல்லி வனப்பகுதியில், நேற்று காலை 9:00 மணிக்கு, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, புதரிலிருந்து திடீரென வந்த காட்டு யானை, சிவக்குமார் என்ற தற்காலிக வன ஊழியரை தாக்கியது. உடன் சென்றவர்கள் சப்தமிட்டு யானையை விரட்டி, சிவகுமாரை மீட்டனர்.யானை தாக்கியதில் சிவக்குமாரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி