உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூங்கில் காட்டில் பரவிய வனத்தீ; போராடிய தீயணைப்பு வீரர்கள்

மூங்கில் காட்டில் பரவிய வனத்தீ; போராடிய தீயணைப்பு வீரர்கள்

கூடலுார் : கூடலுார் தொரப்பள்ளி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம், மூங்கில் காட்டில் ஏற்பட்ட வனத்தீயை, வனத்துறையினர்; தீயணைப்பு துறையினர் போராடி கட்டுப்படுத்தினர்.கூடலுார், முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், நடப்பு ஆண்டு கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. முதுமலை, கூடலுார் வனப்பகுதியில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த மாதம், 23ம் தேதி, தொரப்பள்ளி, அல்லுார் வயல் பகுதியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மூங்கில் காட்டில் வனத்தீ ஏற்பட்டு, 10 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து பாதிக்கப்பட்டது.கடந்த, 2ம் தேதி முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச்சரகத்தில் ஏற்பட்ட வனத்தீயில், 40 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், தொரப்பள்ளி, அல்லுார் வயல் பகுதியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மூங்கில் காட்டில் நேற்று, மாலை, 4:30 மணிக்கு மீண்டும் வனத்தீ ஏற்பட்டது. வனவர்கள் வீரமணி, குமரன், வனக்காப்பாளார் மாரசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி, 5:30 மணிக்கு தீயை கட்டுபடுத்தினர். வனத்தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை