மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடு
2 hour(s) ago
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு
2 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
2 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார் அருகே நெலாக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை முகாமிட்டு, பகல் மற்றும் இரவு நேரங்களில் பஜார் பகுதியில் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 'இந்நிலையில், யானையை பிடித்து முதுமலை வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என, வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பில், அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் உஸ்மான், முஸ்லிம் லீக் மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர், தி.மு.க., கிளை செயலாளர் முகமது ஷாபி, நாம் தமிழர் கட்சி தொகுதி செய்தி தொடர்பாளர் சசிதரன் உள்ளிட்டோர் இணைந்து, பிதிர்காடு வனச்சரகரிடம் மனு அளித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'வனத்துறை உயர் அதிகாரிகள் அனுமதியுடன், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago