மேலும் செய்திகள்
பழைய மீன்கள் விற்ற வியாபாரிக்கு அபராதம்
17 minutes ago
ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பாம்பேகேசில் 20 வயது வாலிபர், கேத்தி தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்.ஊட்டி, பிங்கர்போஸ்ட் பகுதி, 19 வயது மாணவி, கோவை தனியார் கல்லுாரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்தார். இருவரும் பள்ளி நண்பர்கள். சில ஆண்டுகளாக காதலித்தனர்.வார விடுமுறையை ஒட்டி, 10ம் தேதி மாணவியை தன் வீட்டுக்கு மாணவர் அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்தி உள்ளனர்.பின், மாணவர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் உட்கொண்டுள்ளனர். போதை அதிகமாகி மாணவி மூச்சுத்திணறி இறந்துள்ளார்.போதை தெளிந்த பின், மாணவி இறந்து கிடப்பதை பார்த்த மாணவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.போலீசார் சோதனையிட்டதில், மதுபாட்டில்கள், போதை காளான்கள் சிக்கின. தொடர்ந்து, அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது.
17 minutes ago