உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அ.தி.மு.க., 54வது ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம்

அ.தி.மு.க., 54வது ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம்

கோத்தகிரி: கோத்தகிரியில் அ.தி.மு.க., 54வது துவக்க விழா பொதுக்கூட்டம், மார்க்கெட் திடலில் நடந்தது. அ.தி.மு.க., நகர செயலாளர் நஞ்சு சுப்பிரமணி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மாதன், சிவகாமி எஸ்டேட் நிறுவனர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஸ்டீபன் மற்றும் மாவட்ட பேரவை இணை செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் தோப்பு அசோகன், சுகுமார், சாந்தி, பிரபாகரன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வினோத் பங்கேற்று, அ.தி.மு.க., உருவான வரலாறு, முப்பது ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், தி.மு.க., ஆட்சியின் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்து பேசினார். திரளான மக்கள் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய செயலாளர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை