மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
15-Jan-2025
ஊட்டி, ; ஊட்டி அரசு கலை கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள்; ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டி, கண்டன போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அரசு கலை கல்லுாரியில், இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில், 4,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லுாரியின் முதல்வராக உள்ள ராமலட்சுமி என்பவர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை அவதுாறாகவும்; தரக்குறைவாகவும் பேசுவதாக குற்றம் சாட்டி, நேற்று காலை கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடு பட்ட பேராசிரியர்கள் கூறுகையில், 'முதல்வர் இந்த கல்லுாரிக்கு வந்தது முதல், பணியாளர்களை அவ துறாக பேசி வருகிறார். சமீபத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பெண் ஊழியரை மிகவும் தரக் குறைவாக பேசி உள்ளார். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கல்லுாரி முதல்வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்,' என்றனர். முதல்வர் ராமலட்சுமி கூறுகையில்,''கல்லுாரி நிர்வாகம் சரியாக இயங்குவதற்காக அனைவரிடமும் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தி வருகிறேன். யாரையும் அவதுாறாக, தகாத வார்த்தைகளால் இதுவரை நான் பேசியது கிடையாது. கல்லுாரி மாணவ, மாணவிகள் யாரும் இது போல் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை. நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் என்னுடைய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம்,'' என்றார்.
15-Jan-2025