உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராம சபைக்கு வராத அதிகாரிகளை கண்டித்து சவப்பெட்டி வைக்க முயற்சி

கிராம சபைக்கு வராத அதிகாரிகளை கண்டித்து சவப்பெட்டி வைக்க முயற்சி

பந்தலூர்: சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து, சவப்பெட்டி வைக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பதில், ஆசிரிய பயிற்றுநர்கள், சாலை பணியாளர் ஆகியோர் பங்கேற்றனர். துறை சார்ந்த கேள்விகளுக்கு இவர்களால் பதில் தெரிவிக்க இயலாது என்றும், மக்களின் பல்வேறு குறைகள் குறித்து ஒவ்வொரு கிராம சபையில் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத செயலை கண்டித்தும், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த முன்வராத அதிகாரிகளை கண்டித்தும், சமூக ஆர்வலர்கள் கார்த்திக், யசோதரன், சங்கீதா ஆகியோர் இணைந்து, கிராம சபை கூட்டத்தில் சவப்பெட்டி வைப்பதற்காக ஆட்டோவில் எடுத்து வந்தனர். அதை தடுத்த போலீசார், சவப்பெட்டியை பறிமுதல் செய்து, மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கார்த்திக், 25, யசோதரன், 42, சங்கீதா, 43, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை