டென்ட் ஹில் குடியிருப்புக்கு கரடி விசிட்
குன்னூர்: குன்னூர் டென்ட் ஹில் குடியிருப்பில் சுற்றித்திரிந்த கரடியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குன்னூர் டென்ட் ஹில், பாலகிளவா பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. நள்ளிரவு, 1:00 மணியளவில் வந்த கரடி, குடியிருப்புகள் வழியாக சென்றது. சப்தம் கேட்ட சுரேஷ் குமார் வெளியே வந்து பார்த்துள்ளார். ஆட்கள் நடமாட்டத்தை அறிந்து கரடி ஓட்டம் பிடித்தது. ஏற்கனவே இப்பகுதியில் நுழைந்து கடைகளை உடைத்து பொருட்களை கரடி சேதப்படுத்தியுள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் வந்து செல்லும் கரடியால் மக்கள் இரவு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். வனத்துறையினர் கண்காணித்து, கரடிக்கு கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதிக்குள் விட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.