உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பகல் நேரத்தில் காட்டெருமை நடமாட்டம்

பகல் நேரத்தில் காட்டெருமை நடமாட்டம்

குன்னுார் : குன்னுார் அருகே அருவங்காடு பகுதிகளில், 15க்கும் மேற்பட்டகாட்டெருமைகள் முகாமிட்டுள்ளன.பகல் நேரத்தில், அருவங்காடு ஜெகதளா சாலை, தொழிற்சாலை குடியிருப்பு, விநாயகர் கோவில், கலைமகள் தெரு வழியாக உதயம் நகரில் உலா வருகின்றன. நேற்று காலை ஒசட்டி பகுதிக்கு சென்ற காட்டெருமைகள் நடைபாதையில் அணிவகுத்துசென்றது. இதனால், பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர் அச்சமடைந்தனர். அங்கிருந்துசென்ற பிறகே பள்ளிக்கு சென்றனர். வனத்துறையினர் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை