உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்பு அருகே காட்டெருமை; பொதுமக்கள் நடமாட அச்சம்

குடியிருப்பு அருகே காட்டெருமை; பொதுமக்கள் நடமாட அச்சம்

குன்னுார் : குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஸ்டேன்லி பார்க் பகுதியில் குட்டிகளுடன், 5 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கடந்த சில நாட்களாக உணவை தேடி உலா வருகிறது. காலை நேரங்களில் காட்டெருமைகள் அங்கிருந்து நகரும் வரை காத்திருந்து, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. பணிக்கு செல்வோரும் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வனத்துறையினர் கண்காணித்து காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை