உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிராட்பேண்ட் இணைப்பு பணி; மின் கம்பங்களில் புதிய கேபிள்

பிராட்பேண்ட் இணைப்பு பணி; மின் கம்பங்களில் புதிய கேபிள்

கூடலுார் : கூடலுாரில் 'பிராட்பேண்ட்' இணைப்பு வழங்க வசதியாக, மின் கம்பங்களில் பைபர் கேபிள் அமைக்கும் பணியை பி.எஸ்.என்.எல்., துவங்கி உள்ளது. மாநிலத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அடுத்த மாதம், 4ஜி சேவையை துவங்க உள்ளது. இதற்காக கூடுதல் டவர்கள் மற்றும் அதற்கான புதிய தொழில்நுட்பக் கருவிகள் பொருத்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூடலுார் பகுதியில், வீடுகளுக்கு 'பிராட்பேண்ட்' இணைப்பு வழங்க, வசதியாக மின் கம்பங்களில், பைபர் கேபிள் அமைக்கும் பணியை துவங்கி உள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில்,'வீடுகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்க வசதியாக, மின்கம்பங்கள் பைபர் கேபிள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இணைப்பில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க முடியும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை