உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாக்கிங் செல்லும் எருமைகள்; போக்குவரத்து பாதிப்பு

வாக்கிங் செல்லும் எருமைகள்; போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார்; பந்தலுார் பஜாரில் கால்நடைகள் அதிகரித்து வருவதால், பாதசாரிகளும், வாகன ஓட்டுனர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. பந்தலுார் பஜார் பகுதி, தமிழக - கேரள இணைப்பு சாலையில் அமைந்துள்ளது. இதனால், அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதுடன், பல்வேறு தேவைகளுக்காகவும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பஜாருக்கு வந்து செல்கின்றனர். சாலை மிகவும் குறுகளாக உள்ளதுடன், சாலையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.இதற்கிடையில் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை, பஜாரில் உலா விடுவதால் வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், பாதசாரிகள் கால்நடைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெலாக்கோட்டை பஜாரில், பணி முடித்து திரும்பிய செவிலியர் ஒருவரை பஜாரில் சுற்றிய மாடு ஒன்று முட்டியபோது அவர் காயமடைந்தார். மேலும், நாள்தோறும் எருமைகள் சாலையில் நடந்து செல்வதால், அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மக்கள் கூறுகையில், 'பந்தலுார் பஜாரில் கால்நடைகளால் பிரச்னைகள் அதிகரிக்கும் முன்பாக, இதனை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி