மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
8 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
8 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
8 hour(s) ago
ஊட்டி : ஊட்டி ஏ.டி.சி.,யில் கால்வாய் அமைக்கும் பணியை ஒட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லோயர் பஜார் சாலையில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்படுவதால் பாதிப்பு ஏற்பட்டது.இதை அடுத்து, லோயர் பஜார் சாலையில் மூன்று இடங்களில் கழிவு நீர் வெளியேறும் வகையில், 15 அடி நீளம், 10 அடி ஆழத்திற்கு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக இப்பணிகள் நடந்து வருகிறது.கால்வாய் அமைக்கும் பணியை ஒட்டி, ஏ.டி.சி., ரவுண்டானா வழியாக அணிக்கொரை, கடநாடு, எப்பநாடு, காவிலோரை, தொரை ஹட்டி, பெந்தட்டி, சின்ன குன்னுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், மினி பஸ்கள், ஏ.டி.சி., பஸ் ஸ்டாப் பகுதியில் திரும்பும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.ஏ.டி.சி., பஸ் ஸ்டாப்பில் ஏற்கனவே, தும்மனட்டி, இடுஹட்டி, கப்பச்சி, பி.மணி ஹட்டி, பாலகொலா, அச்சனக்கல், அறை ஹட்டி மற்றும் கைக்காட்டி, மஞ்சூர் வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், பஸ் ஸ்டாப்பில் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பாலும் போக்குவரத்து நெரிசலாலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.எனவே, கால்வாய் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago