மேலும் செய்திகள்
பீட்ரூட் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
22 hour(s) ago
ஊட்டி:ஊட்டி கேந்திரவித்யாலயா பள்ளியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை ஒட்டி, மாணவ மாணவியருக்கு நடந்த ஓவிய போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மத்திய அரசின் 'எக்ஸாம் வாரியர்ஸ்' திட்டத்தில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, புத்துணர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க ஏதுவாக நடந்த போட்டியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், வாரிய பள்ளிகள் மற்றும் ராணுவ பள்ளி உட்பட, 18 பள்ளிகளைச் சேர்ந்த, 118 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லுாரி முதல்வர் சுஜாதா மற்றும் ஷோபனா, சாலமன் சோலோ உள்ளிட்டோர் போட்டிக்கு நடுவர்களாக இருந்தனர். சிறப்பாக ஓவியம் வரைந்த முதல் ஐந்து பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் பங்கஜ்குமார் வர்மா செய்திருந்தார்.
22 hour(s) ago