உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோர பள்ளதாக்கில் தொங்கிய கண்டெயனர் லாரி

சாலையோர பள்ளதாக்கில் தொங்கிய கண்டெயனர் லாரி

பந்தலுார்; கேரளா வயநாடு பகுதியில், சாலையோர பள்ளதாக்கில் கண்டெய்னர் லாரி தொங்கியது. கர்நாடக மாநிலத்தில் இருந்து, இருசக்கர வாகனங்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று வயநாடு வழியாக கோழிக்கோடு பகுதிக்கு சென்றுள்ளது. தாமரைச்சேரி, 9-வது வளைவு பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தாக்கில் இறங்கி தொங்கியது. லாரியின் டீசல் டேங்க் சாலையோர தடுப்பில் சிக்கியதால் கண்டெய்னர், 300 அடி ஆழமுள்ள பள்ளதாக்கில் விழாமல் தப்பியது. தொடர்ந்து, கல்பெட்டா தீயணைப்பு துறையினர், வந்து லாரியில் சிக்கியிருந்த டிரைவரை கயிறு கட்டி மீட்டனர். இதனால், வயநாடு -கோழிக்கோடு இடையே போக்குவரத்து தடைபட்டது. தொடர்ந்து, கிரேன் உதவியுடன் கண்டெய்னர் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை