மேலும் செய்திகள்
ஊட்டி பூண்டு கிலோ ரூ.50 ஆக சரிவு
23-Jun-2025
குன்னுார்; ஊட்டி பூண்டு வரத்து குறைவு காரணமாக, விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், 1,500 ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில், ஒரு கிலோ பூண்டு, 600 ரூபாய் முதல், சில ரகம், 1,000 ரூபாய் வரை விற்பனையானது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இருந்து, விலை சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், மேட்டுப்பாளையம் மண்டியில் நேற்று நடந்த வார ஏலத்தில், கிலோவிற்கு,150 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை ஏலம் போனது.எடப்பள்ளியை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ''சமீப காலமாக பூண்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து அதிகபட்சமே, கிலோவிற்கு, 40 ரூபாய் என விற்பனையானது. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், மீண்டும் பூண்டு விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வரத்து குறைந்தது. தற்போது, மகாராஷ்டிராவில் இருந்து விதைக்காக பலரும் ஊட்டி பூண்டு வாங்கி சென்றதால், தற்போது கிராக்கி ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது,'' என்றார்.
23-Jun-2025