உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகன விபத்து; ஒருவர் காயம்

வாகன விபத்து; ஒருவர் காயம்

ஊட்டி : கேத்தியில் ஜீப் மோதி ஸ்கூட்டரில் வந்தவர் படுகாயமடைந்தார். கேத்தி ஜார்ஜ் ஹோம் பகுதியை சேர்ந்­தவர் சீனிவாசன்(35). இவர் நேற்று காலை எல்லநள்ளியிலிருந்து கேத்திக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கேத்தி ரயில் நிலையம் அருகே வரும் போது பின்னால் வந்த அர்மடா ஜீப், ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் ஜீப்பின் அடியில் ஸ்கூட்டர் சிக்கியது. இந்த விபத்தில் சீனிவாசனுக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் தலையில் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வை­க்­­­­கப்பட்டார். கேத்தி போலீசார் வழக்கு பதி­வு செய்து ஜீப் டிரைவர் கஜா உசை­னை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை