உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இளம் தன்னார்வலர்களுக்கு பேரிடர் பயிற்சி; ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

இளம் தன்னார்வலர்களுக்கு பேரிடர் பயிற்சி; ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊட்டி; பேரிடர் காலங்களில் மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளித்து தயார்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டு நலப்பணி திட்டம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து, 400 இளம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தப்பட உள்ளனர். நாட்டு நலப்பணி திட்டம் வாயிலாக, 100 தன்னார்வலர்களும், தேசிய மாணவர் படை வாயிலாக, 200 தன்னார்வலர்களும், நேரு யுவகேந்திராவில், 100 தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் நபர், 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., என்.ஒய்.கே.எஸ்., ஆகிய ஏதேனும் ஒன்றில் பதிவு செய்திருக்க வேண்டும். கல்வித்தகுதி குறைந்தபட்சம், 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆபத்து, பேரிடர் மற்றும் இயற்கை இன்னல்கள் காலங்களில் உதவும் எண்ணம் கொண்ட தகுதியுடைய தன்னார்வலர்கள் அனைவரும் இப்பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். பயிற்சி, 3 வார காலம் அளிக்கப்படும். உணவு, தங்குமிடம் பயிற்சி ஏற்பாட்டாளர்களால் செய்து தரப்படும். விண்ணப்பிக்க அழைப்பு பயிற்சி நிறைவில், சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேரிடர் கால மீட்பு கருவிகள் பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். பொது சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று தங்களை தயார் செய்து கொண்டு பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவலாம். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை அருகில் உள்ள தாசில்தார் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ