மேலும் செய்திகள்
வயநாடில் பிரியங்கா அண்ணன் ராகுலுடன் பிரசாரம்
24-Oct-2024
பந்தலுார் ; கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக எல்லையில் உள்ள, 5- மதுகடைகள் மூடப்பட்டன.கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், நாளை இடை தேர்தல் நடக்கிறது. இதனால், நேற்று மாலை, 6:00 மணிமுதல் வயநாடு பகுதியில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. மேலும், கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழக பகுதிக்கு உட்பட்ட, தாளூர், எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு ஆகிய, 5- டாஸ்மாக் மது கடைகள் நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.இவை அனைத்தும், 13 ஆம் தேதி மாலை, 6:00 மணிக்கு திறக்கப்படும். இதை தவிர, எருமாடு பகுதியில் உள்ள தனியார் பார் அடைக்கப்பட்டன. மேலும், மாநில எல்லை பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்தும், தமிழக, கேரளா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
24-Oct-2024