உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குட்டிகளுக்கு உணவு உட்கொள்ளும் வழிமுறைகள்

குட்டிகளுக்கு உணவு உட்கொள்ளும் வழிமுறைகள்

பந்தலுார்;பந்தலுாரில் யானை குட்டிகளுக்கு உணவு உட்கொள்ளும் வழிமுறைகளை தாய் யானை கற்று கொடுத்தது. பந்தலுார் சுற்று வட்டார பகுதி வனங்களில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டு வருகிறது. அதில், ஒவ்வொரு யானை கூட்டத்திலும் குறைந்தது இரண்டு யானை குட்டிகளாவது இருப்பதை காண முடிகிறது. இங்கு, குடியிருப்புகளை ஒட்டிய புதர்களில் தண்ணீர் மற்றும் பசுமையான உணவுகளும் உள்ளதால் யானைகள் அதிக அளவில் முகாமிட்டு தங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.பொதுவாக யானை குட்டிகள் ஒரு வயது ஆன பின்னரே, தனது துதிக்கையில் புற்களை பறித்து உட்கொள்ள துவங்கும். அதுவரை யானை கூட்டத்தில் உள்ள தாய் யானை உணவு உட்கொள்ளும் வழி முறையை கற்றுத்தரும்.அதில், பந்தலுார் அருகே காவயல் என்ற இடத்தில், தாய் யானை ஒன்று தனது குட்டிக்கும், வேறொரு யானையின் குட்டிக்கும், புற்களை பறித்து உட்கொள்வதை கற்றுக் கொடுத்தது. அதனைப் பார்த்த யானை குட்டிகளும், புற்களை பறித்து உட்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டது. இந்த யானைகளின் ருசிகர காட்சியை மக்கள் ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை