மேலும் செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து
2 hour(s) ago
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
2 hour(s) ago
பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, பெருங்கரை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில், தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கூடலுார் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், ஆண்டுதோறும் சமூக விரோதிகள் வனப்பகுதிக்கு தீ வைத்து அழிப்பதால், வனங்கள் பாதிக்கப்பட்டு பல அரிய வகை மூலிகை செடிகள் அழிவதுடன், வன விலங்குகளின் வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனால், வனப்பகுதியில் தீ வைப்பதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. எனினும், ஒரு சில இடங்களில் சமூகவிரோதிகள் வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில், பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, பெருங்கரை வனப்பகுதியில், வனவர் பெலிக்ஸ் மேற்பார்வையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ தடுப்பு கோடுகள் அமைப்பதுடன் வன காவலர்கள் மூலம், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
2 hour(s) ago
2 hour(s) ago