உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கரன்சிக்கு வந்த யானைகள் விரட்டிய வனத்துறை

 கரன்சிக்கு வந்த யானைகள் விரட்டிய வனத்துறை

குன்னுார்: குன்னுார் கரன்சி, லேம்ஸ்ராக் பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக இரு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. குடியிருப்புகள் அருகே உலா வந்தது. குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். யானைகளை அளக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர். மக்கள் கூறுகையில்,' துாதுார்மட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக, 5 காட்டு யானைகள் இரவில் மட்டும் வந்து மேரக்காய்களை உட்கொண்டும், செடிகளை சேதம் செய்து செல்கின்றன. பகல் நேரத்தில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விடுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை