உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் உறைபனி தாக்கம்: பசுந்தேயிலை கருகுவதால் பாதிப்பு

நீலகிரியில் உறைபனி தாக்கம்: பசுந்தேயிலை கருகுவதால் பாதிப்பு

குன்னுார்;நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன.ஊட்டி, குன்னுார், குந்தா உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறை பனியின் தாக்கம் துவங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்த பட்ச வெப்பநிலை பாதிவாகி உள்ளது.ஆண்டுதோறும் நவ., மாத இறுதி அல்லது டிச., மாத துவக்கத்தில் உறைபனி துவங்கும் நிலையில், இந்த ஆண்டு தாமதமாக ஜன., மாதம் பனியின் தாக்கம் துவங்கியது. பல இடங்களிலும் புல்வெளிகள் கருகி வருகிறது.

தேயிலை செடிகள் கருகல்

மாவட்டத்தில், 11 தேயிலை எஸ்டேட் நிறுவனங்களின் கீழ், 16 ஆயிரத்து 500 ஏக்கர் உட்பட 1.50 லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால், குன்னுார், ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் நாளுக்கு நாள் பசுந்தேயிலை கருகி வருகிறது. குறிப்பாக இருமலைகள் சந்திக்கும் தாழ்வான பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகசூல் குறைந்து வருவதால், சில இடங்களில் விவசாயிகள் ஸ்பிங்ளர் மற்றும் தெளிப்பான். மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில்,''நீலகிரியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த, நவ., டிச., மாதங்களில் மழையின் பொழிவு இருந்தது.ஜன.,யில் பனி தாக்கம் துவங்கியுள்ளது. குறிப்பா பள்ளத்தாக்கு பகுதிகளிலும், உறைபனி மைனஸ் டிகிரிக்கு குறைவாக உள்ளது. புல்வெளி கருகி வருகிறது. தேயிலை செடிகளும் கருகி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மொத்தம் எத்தனை ஏக்கர்கள் பாதித்துள்ளது என்பது தெரிய வரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்