உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு ஊழியர் சங்கம் போராட்டம்

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு ஊழியர் சங்கம் போராட்டம்

ஊட்டி: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,' என்பன உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமை வகித்தார். வருவாய்த்துறை மாவட்ட தலைவர் நந்தகுமார், பொன் பொதிகை நாதன் கோரிக்கைகள் குறித்து பேசினார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவபெருமாள் கூறுகையில்,''புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை, 25 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைத்ததை தவிர்த்து மீண்டும் முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்,'' என்றார் நெடுஞ்சாலைத்துறை மாவட்ட பொருளாளர் கனகரத்தினம், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை