உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி விழாவில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

பள்ளி விழாவில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

பந்தலுார்:பந்தலுார் அருகே பாட்ட வயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா,' என, முப்பெரும் விழா நடந்தது. ஆசிரியர் சகுந்தலா வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா காந்தி கொடியேற்றினார். பள்ளி பி.டி.ஏ., தலைவர் ஸ்ரீஜேஸ் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் வண்ணமயமான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மேலும், கோவையில் செயல்படும் துாரிகை அறக்கட்டளை சார்பில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கவுரவிக்கும் விதமாக பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.தொடர்ந்து, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம், ஆசிரியர் பயிற்றுனர் பரமேஸ்வரன், துாரிகை அறக்கட்டளை நிர்வாகிகள் ரஞ்சித் உட்பட பலர் பேசினர். ஆசிரியர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி