உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஹெல்ப் டெஸ்க் மாற்றம்

ஹெல்ப் டெஸ்க் மாற்றம்

ஊட்டி;ஊட்டி அசெம்பிளி தியேட்டர் முன்புறம் அமைக்கப்பட்ட 'ஹெல்ப் டெஸ்க்' இடம் மாற்றப்பட்டது.ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், 125 ஆண்டு பாரம்பரியமிக்க அசெம்பிளி தியேட்டர் அமைந்துள்ளது. ஊட்டியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள், பொலிவு மாறாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வகை கட்டடங்களை பாதுகாக்க ஏதுவாக, 'ஊட்டி -200' விழாவில், மாநில முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கிய நிலையில், பல பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட காவல்துறை சார்பில், பாரம்பரிய கட்டடமான அசம்பளி திரையரங்கு பகுதியில், கடந்த வாரம், 'ஹெல்ப் டெஸ்க்' அமைக்கும் பணி நடந்தது. தியேட்டரின் பொலிவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஹெல்ப் டெஸ்க் அமைவதற்கு, பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.இந்நிலையில், நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால், மாநில கவர்னர்; மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினார். இதை தொடர்ந்து, குறிப்பிட்ட இடத்தில் பணி நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, கிரேன் உதவியுடன் 'ஹெல்ப் டெஸ்க்' அங்கிருந்து துாக்கப்பட்டு, அருகேவுள்ள இடத்தில் பொருத்தப்பட்டது. இதற்கு நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை