உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தலில் வாக்களிப்பது எப்படி ? மக்களை சந்தித்து விழிப்புணர்வு

தேர்தலில் வாக்களிப்பது எப்படி ? மக்களை சந்தித்து விழிப்புணர்வு

சூலூர் : லோக்சபா தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில், வாக்காளர்கள் மத்தியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதில் எப்படி ஓட்டளிப்பது என்பது குறித்தும், மக்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி சூலூர் சட்டசபை தொகுதியில் துவங்கியுள்ளது. கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தேர்தல் ஆணையம் சார்பில், வாகனத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி. பேட் இயந்திரம் வைக்கப்பட்டு, அதை பயன்படுத்தும் முறை குறித்து ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், வாக்காளர்களை இயந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்த சொல்லி, செயல்முறை விளக்கம் அளிக்கின்றனர். மேலும், ஒலிப்பெருக்கி மூலம், வாகனம் வந்துள்ளதை அறிவித்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளித்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் என, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஏராளமான பொதுமக்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்து பார்த்து சென்றனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,' வரும், பிப்., 15 ம்தேதி வரை சூலூர் தொகுதி முழுக்க வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி பூத் வாரியாக நடக்க உள்ளது. அப்போது பொதுமக்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்