உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்: அகற்றினால் நெரிசல் குறையும்

இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்: அகற்றினால் நெரிசல் குறையும்

ஊட்டி:ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிர்புறம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுஉள்ளது.ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், நடைபாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக, நெடுஞ்சாலை துறை மூலம், சாலை மேம்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில், மூன்று நாட்களுக்கு முன், தார் போடுவதற்கு, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி, நடைபாதையில் நிறுத்தியதாக கூறப்படுகிறது இதனால், நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இங்கு நிறுத்தப்பட்டுள்ள பல இருசக்கர வாகனங்கள் பல மாதங்களாக கேப்பாரற்று இருப்பதாக உள்ளது.மக்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட பகுதியை போலீசார் ஆய்வு செய்து, பொது மக்களுக்கு இடையுறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை