உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேகத்தடை பகுதியில் விபத்து அதிகரிப்பு

வேகத்தடை பகுதியில் விபத்து அதிகரிப்பு

குன்னுார்:குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்ட வேகத் தடைகள் டிரைவர்களுக்கு தெரியாததால் விபத்து ஏற்பட்டு வருகிறது. குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணிகளின் போது யானைகள் வழித்தடத்தில், குட்டிகளுடன் யானைகள் கடக்க சிரமப்பட்டது. இதனால், மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணனைக்கு பின், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சதீஷ்குமார், பாரதிதாசன் தலைமையிலான நீதிபதிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். யானைகள் கடந்து செல்லும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, 9 இடங்களில் 18 வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. அதில், பெரும்பாலான வேகத்தடைகளில் பெயின்ட் அடிக்காமல் உள்ளது. மேலும், கே.என்.ஆர்., காட்டேரி உள்ளிட்ட பகுதி களில் வளைவு பகுதிகளுக்கு அருகில் அமைத்த வேகத்தடை சரிவர அமைக்கவில்லை. இதனால், கார், லாரி, இருசக்கர வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வருகிறது.எனவே, வேகத் தடைக்கு பெயின்ட் அடிப்பதுடன், விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகளை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை