உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு

படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு

ஊட்டி:ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு, சாதாரண நாட்களில் கூட, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு, இயற்கை காட்சியை கண்டுக்களித்தப்பின், படகு இல்லத்திற்கு சென்று, படகு சவாரி செய்ய தவறுவதில்லை.இங்குள்ள ரயில் நிலையம், தேன் நிலவு படகு இல்லம் மற்றும் மான் பூங்கா போன்ற மையங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, 5 கோடி ரூபாய் செலவில், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணி, வரும் மே மாதம் நடைபெறும் கோடை விழாவுக்குள் நிறை வடைய உள்ளது. இந்நிலையில், வார இறுதி நாட்களில், படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை உயர்ந்து வருகிறது.படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு வாங்கி, படகு சவாரி செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை