மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
16 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
16 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
16 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
16 hour(s) ago
பந்தலுார்:'பந்தலுார் பஜார் சாலையோரம் அமைக்கப்பட உள்ள 'டிரான்ஸ்பார்மரை' வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக- - கேரளா- - -கர்நாடக மாநிலங்களின் இணைப்பு சாலையில் பந்தலுார் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 'சாலையை அகலப்படுத்த வேண்டும்,' என, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பஜாரின் மையப்பகுதியில், முருகன் கோவில் செல்லும் பாதை அருகே, சாலையோரம் 'டிரான்ஸ்பார்மர்' அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால், சாலை அகலப்படுத்தும் போது சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளதுடன், முருகன் கோவில் திருவிழா நேரங்களில், பக்தர்கள் கூட்டம் இந்த பகுதியில் அதிகளவில் வருவது வழக்கம். மேலும், விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இதே இடத்தில் தான் விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் நடக்கும். இங்கு டிரான்ஸ்பார்மர் வந்தால் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.இது குறித்து இப்பகுதி மக்கள் சார்பில், முரளி என்பவர் மின்வாரிய அதிகாரிகளிடம் அளித்த மனுவில், 'டிரான்ஸ்பார்மரை நடைபாதையை ஒட்டி உள்ள போக்குவரத்து இல்லாத பகுதியில் அமைத்தால், யாருக்கும் பிரச்னை இருக்காது. அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago