உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டீ கடைகளில் கலப்படத்தை தடுக்க ஆய்வு அவசியம்; சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

டீ கடைகளில் கலப்படத்தை தடுக்க ஆய்வு அவசியம்; சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

ஊட்டி : 'ஊட்டி நகரில் டீ கடைகளில் கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் கோடை சீசன் துவங்குகிறது. தற்போது, சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின் வருகை முன்னதாகவே வர துவங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர், 'பல தேனீர் கடைகளில் சாயம் கலந்த தேனீர் பருக தருகின்றனர்,' என, கலெக்டருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதில், 'மாவட்ட முழுவதும் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஊட்டி நகரில் உள்ள சில குடோனில் கலப்பட தேயிலை துாள் பேக் செய்து மாவட்ட முழுவதும் உள்ள டீ கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், 'மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் விதிமீறி செயல்படும் குடோன் குறித்து சாய டீ விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்யவேண்டும்,' என, மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ''கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேனீர் கடைகளில், கலப்பட தேயிலை துாள் பயன்படுத்துவது தெரியவந்தால், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள், 94440-42322 வாட்ஸ் -ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை