உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை பயிர்கள் கண்காட்சி போட்டியாளர்களுக்கு அழைப்பு

மலை பயிர்கள் கண்காட்சி போட்டியாளர்களுக்கு அழைப்பு

குன்னுார்,; குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது: குன்னுார் காட்டேரி பூங்காவில், முதல் மலைபயிர்கள் கண்காட்சி வரும், 30ம் தேதி முதல் ஜூன், 1ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கிறது. அதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த மலைப்பயிர்கள் தோட்டங்களுக்கு (தேயிலை, காபி) பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மலை பயிர்கள் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்ப படிவங்கள், குன்னுார் சிம்ஸ்பூங்கா அலுவலகத்தில் வரும், 29ம் தேதி முதல், 75 ரூபாய் செலுத்தி பெற்று விண்ணப்பிக்கலாம். ஊட்டி, கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் உள்ள போட்டியாளர்கள் இந்த மலை பயிர்கள் காட்சியில் பங்கேற்க, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா; கூடலுார் கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெறலாம். மே, 10ம் தேதி வரை வழங்கப்படும் இந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, மே, -11ம் தேதிக்குள், சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலத்தில், சமர்ப்பிக்க வேண்டும். மே, 13 முதல் 15ம் தேதி வரை, சிறந்த தோட்டங்கள் தேர்வு செய்யும் குழுவினர், குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் பார்வையிடுகின்றனர். மேலும், விவரங்களுக்கு சிம்ஸ்பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி