உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதிய வசதியில்லாத ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடத்துக்கு மாற்றினால் பயன்

போதிய வசதியில்லாத ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடத்துக்கு மாற்றினால் பயன்

கூடலுார்;முதுமலை, கார்குடி பகுதியில் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலயத்தை, தெப்பக்காட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்ற, பழங்குடியினர் வலியுறுத்தி உள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு, கார்குடி பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் வசதிக்காக, 2016ம் ஆண்டு முதல், கார்க்குடி அரசு உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில் தற்காலிக கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து செயல்பட்டு வருகிறது.இதனை அதிக மக்கள் வசிக்கும் தெப்பக்காடு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி வந்தனர். கட்டட வசதி இல்லாததால் சுகாதார நிலையம் மாற்றப்படவில்லை.இந்நிலையில், தெப்பக்காடு பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைவதற்கான புதிய கட்டடம் கட்ட, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான வனத்துறை அனுமதி கிடைக்காததால், பணிகள் துவங்க தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் அனுமதி வழங்கியதை புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது. ஆனால், இதுவரை சுகாதார நிலையம் புதிய கட்டடத்திற்கு மாற்றவில்லை. பழங்குடி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பழங்குடி மக்கள் கூறுகையில், 'பெரும்பாலான பழங்குடி மக்கள் தெப்பக்காடு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு கார்குடி சென்று வர போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலயத்தை புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை