உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடநாடு போன் கால்கள் குஜராத் வல்லுனர்கள் ஆய்வு மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு கொலை வழக்கு

கோடநாடு போன் கால்கள் குஜராத் வல்லுனர்கள் ஆய்வு மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு கொலை வழக்கு

திருச்சி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள, மறைந்த முதல்வர் ஜெ.,வுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017ல் கொலை, கொள்ளைகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். இதில், ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சயான், வாழையார் மனோஜ் உள்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கொலை, கொள்ளை வழக்கு குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு மலைப்பகுதி என்பதால், பி.எஸ்.என்.எல்., டெலிபோன், மொபைல் போன் இணைப்புகளே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.அதில், சந்தேகத்துக்கு இடமான, 20க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன் அழைப்புகள் அடங்கிய, 10 டிஜிட்டல் டேப்புகளை, ஏற்கனவே திருச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.அவற்றை குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் பல்கலைக்கு ஆய்வுக்கு அனுப்பியபோது, பிரதான சர்வர்களை நேரில் ஆய்வு செய்தால் தான், துல்லியமாக பதிவுகள் குறித்து தகவல் கூற முடியும் என்று, பல்கலை வல்லுனர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து , குஜராத்தில் இருந்து வந்த, இரு வல்லுனர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., மாதவன் போலீசார் என, 10 பேர், திருச்சி சிங்காரத்தோப்பு பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.அங்குள்ள, இரண்டாவது மாடியில் உள்ள தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் பிரதான டிஜிட்டல் சர்வர்கள் அமைந்துள்ள பகுதியில், சேகரிக்கப் பட்ட மொபைல் போன்களின் பதிவுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை