உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  புலிக்கு வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை; அங்கேயே விடுவித்ததால் மக்கள் எதிர்ப்பு

 புலிக்கு வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை; அங்கேயே விடுவித்ததால் மக்கள் எதிர்ப்பு

கூடலுார்: முதுமலை, மசினகுடி மாவனல்லா பகுதியில், பெண்ணை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வைத்த கூண்டில், சிக்கிய சிறுத்தையை அதே பகுதியில் விடுவித்ததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனல்லா பகுதியில், கடந்த 24ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள், 60, என்பவரை புலி தாக்கி கொன்றது. புலியை பிடிக்க வனத்துறையினர், மூன்று இ டங்களில் கூண்டுகள் வைத்துள்ளனர். மேலும், ட்ரோன் கேமரா பயன்படுத்தினர்; 34 இடங்களில் தானியங்கி கேமராக்களை வைத்து புலியை தேடும் பணியில், வன குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், இதுவரை புலி கூண்டில் சிக்கவில்லை. இந்நிலையில், புலிக்கு வைக்கப்பட்ட ஒரு கூண்டில் நேற்று, அதிகாலை சிறுத்தை சிக்கியது. அதிகாரிகள் உத்தரவுப்படி கூண்டில் சிக்கிய சிறுத்தையை, வன ஊழியர்கள் அதே பகுதியில், விடுவித்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'பெண்ணை தாக்கி கொன்ற புலியை பிடிப்பதற்காக, மூன்று இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணிக்கிறோம். அதில் ஒரு கூண்டில் நேற்று அதிகாலை சிக்கிய சிறுத்தை, அதே பகுதியில் விடுவிக்கப்பட்டது. 'அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வரும் காலங்களில் கூண்டில் சிறுத்தை சிக்கினால், அதைப் பிடித்து, வேறு பகுதியில் விடுவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி